×

341 கி.மீ. நீளம்…ரூ.22,500 கோடி மதிப்பு: உ.பி.-யில் நாட்டிலேயே மிக நீளமான அதிவேக எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

சுல்தான்பூர்: நாட்டிலேயே மிகவும் நீளமான அதிவேக நெடுஞ்சாலை உத்திரப்பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சலில் திறக்கப்பட்டுள்ளது. சுல்தான்பூர் மாவட்டம் கர்வால் கேரி என்ற இடத்தில் இன்று நடந்த திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இந்த 6 வழிப்பாதை நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். 22,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக சாலை 341 கிலோ மீட்டர் நீளம் உடையது. லக்னோ மாவட்டத்தில் உள்ள சுவத்தாஜை என்ற கிராமத்தில் தொடங்கி உத்திரப்பிரதேசம் – பிகார் எல்லையில் உள்ள ஹைதார்யா என்ற கிராமத்தில் இந்த சாலை முடிவடைகிறது. இந்த சாலையில் 3,200 மீட்டர் நீளமுள்ள அவசரகால போர் விமான இறங்குதளமும் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராட்சத ஏக்குலஸ் விமானத்தில் வந்து இறங்கினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் மிகவும் நீளமான அதிவேக நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின்னர் மோடி முன்னிலையில் சாலையில் ஜாகுவார், மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்கள் மற்றும் ராணுவ சரக்கு விமானங்கள் தரையிறங்கின. இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இன்றைய நாள் வரை 301 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆக்ரா – லக்னோ சாலை மட்டுமே நாட்டின் அதிவேக எக்ஸ்பிரஸ் சாலையாக இருந்து வந்தது. 341 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் நீளமான பூர்வாஞ்சல் அதிவேக நெடுஞ்சாலை எதிகாலத்தில் 8 வழிச்சாலையாக மாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. …

The post 341 கி.மீ. நீளம்…ரூ.22,500 கோடி மதிப்பு: உ.பி.-யில் நாட்டிலேயே மிக நீளமான அதிவேக எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : U. ,PM Modi ,KB ,Sulthanpur ,Uttar Pradesh ,Sulthanpur District ,Karwal Gary ,India ,Dinakaran ,
× RELATED தென் இந்தியாவில் உ.பி மக்களையும்,...